டில்லி

குஜராத்தில் மோடியின் ஆட்சிக் காலத்தில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாநிலத்தில் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  அது தவிர மோடியின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தவைகள் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்விகளும் பதிந்து வருகிறார்.  அந்த வரிசையில் இன்று மற்றொரு கேள்வியை பதிந்துள்ளார்.

ராகுல் காந்தி “குஜராத் 22 ஆண்டு ஆட்சிக்கான விடைய எதிர்பார்க்கிறது” என்னும் தலைப்பில் கேள்விகளை எழுப்பி வருகிறார்.  அந்த வரிசையில் மோடியின் ஆட்சிக் காலத்தில் மின்சாரம் வாங்கப்பட்டது குறித்து மூன்றாவது கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது முதல் கேள்வி, ”குஜராத்தில் 50 லட்சம் வீடுகள் கட்டித் தருவதாக மோடி வாக்களித்திருந்தார்.  ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 4.72 லட்சம் ஆகும். அவருடைய வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் 45 வருடம் ஆகுமா? என கேட்டிருந்தார்.

இரண்டாவது கேள்வியாக, “கடந்த 1995ஆம் வருடம் ரூ.9183 கோடி ரூபாயாக இருந்த கடன் தற்போது ரூ.241000 கோடியாக மாறியது உங்களின் தவறான பொருளாதார நிர்வாகத்தால் தானே?  அதனால் குஜராத் மக்கள் ஒவ்வொருவரும் ரூ.37000 கடன் சுமையை ஏன் ஏற்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

”கடந்த 2002 முதல் 2016 வரை நான்கு நிறுவனங்களிடம் இருந்து ரூ. 62549 கோடிக்கு மின்சாரம் வாங்கியது ஏன்?  யூனிட்டுக்கு ரூ.3 என விலையில் இருந்த மின்சாரத்தை ரூ. 24 க்கு வாங்கியது யாருடைய பாக்கெட்டை நிரப்புவதற்காக?  மாநிலத்தின் மின்சார உற்பத்தி எதற்காக 62% ஆக குறைக்கப்பட்டது” என கேள்வி எழுப்பி உள்ளார்.

 

 

.