புதுடெல்லி: 
சீனா ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி எழுப்பாமல் ஊடகங்கள் அமைதியாக உள்ளன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் இந்தியத் தேசிய மாணவர் சங்க (NSUI) உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது பேசிய அவர், லடாக்கில், இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிக்குள் சீனா அத்துமீறி ஆக்கிரமித்து உள்ளது. தேசிய தலைநகர் டெல்லியைப் போலப் பரந்த நிலப்பரப்பில், இந்த ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த விஷயத்தில் ஊடகங்கள் அமைதியாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.   இந்த ஆக்கிரமிப்பு  UPA அரசாங்கத்தின் போது நடந்திருந்தால், ஊடகங்கள் 24X7, அதை விமர்சித்து இருக்கும் என்று அவர் கூறினார்.
[youtube-feed feed=1]