சித்ரதுர்கா:
ர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பொம்மகொண்டனஹள்ளியில் இருந்து ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளது டன், தமிழ்நாடு, கேரளாவை கடந்து கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடில் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 11ம் தேதி கேரளாவில் தனது நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 19 நாட்கள் கேரளாவில் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 30ம் தேதி கர்நாடகாவில் தனது நடைபணத்தை தொடங்கினார்.

இன்று 36வது நாளான இன்று கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பொம்மகொண்டனஹள்ளியில் இருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நடைபயணத்தை தொடங்கினார்.

கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய யாத்திரை இதுவரை 905 கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளது. இது மொத்தம் 12 மாநிலங்கள் வழியாகச் சென்று, ஜம்மு-காஷ்மீரில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.