ராகவேந்திரர் ஆராதனை தினம் ஸ்பெஷல் ! ஆகஸ்ட் 4,5,6

மானிடருக்காக மண்ணுலகில் மலர்ந்த மந்திராலய மகான்

மூன்று பிறவிகளிலும் எண்ணற்ற புண்ணியங்களைச் சேர்த்து விட்ட ஸ்ரீராகவேந்திரர் அந்த புண்ணியங்களை எல்லாம் நமக்குத் தருவதற்குக் காத்திருக்கிறார்…

நிறைய பேர் தவறான நினைப்பு கொண்டிருக்கிறார்கள்…

மாத்வர்கள் தான் வழிபட வேண்டும்,

கன்னட மொழி பேசுபவர்கள் தான் அவரை வணங்க வேண்டும் என்று…

அது கிடையாது…

ஸ்ரீராகவேந்திரர் சுவாமி ஜீவ பிருந்தாவனம் இருப்பது தான் கன்னட மொழி பேசும் இடம்…

ஆனால் அவர் பிறந்தது தமிழ் நாட்டில் சிதம்பரம் அருகே புவனகிரியில் தான்…

மதுரையில் கல்வி கற்றார்…

கும்பகோணத்தில் இல்லற வாழ்க்கை நடத்தினார்…

தஞ்சாவூரில் சந்நியாசம் ஏற்றார்…

கும்பகோண மடத்தில் துறவற வாழ்க்கை நடத்தினார்…

மந்திராலயத்தில் பிருந்தாவனத்தில் யோக தவம் செய்கிறார்…

அவருக்கு ஜாதி, மதம், மொழி, வேறுபாடு கிடையாது அது பற்றிப் பேசினாலும் அவருக்குப் பிடிக்காது…

ஆடு மேய்த்த வெங்கண்ணாவுக்கும், தாழ்ந்த ஜாதி என்று கூறி ஊரார் ஒதுக்கிய கனகதாசருக்கு அருள் புரிந்தவர்…

மடி, ஆசாரத்தில் கர்வம் கொண்டு ஸ்ரீராகவேந்திரர் பூஜையில் ஆச்சாரம் பார்த்த ஸ்ரீநிவாசாச்சார்யாரை திருத்தி கடுகை ஏற்க செய்தவர் நம் குரு மகான் ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமிகள்…

ஸ்ரீ குருப்யோ நமஹ !