
கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதை சமீபத்தில் ராகவா லாரன்ஸ் உறுதி செய்தார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக பி.வாசு தெரிவித்துள்ளார். மேலும் வேட்டையன் மன்னன், சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் பிரதான கதையாக இருக்கும் என்றும் , ரஜினிகாந்த் முதல் பாகத்தில் நடித்த மனோதத்துவ மருத்துவராகவே நடிப்பார் என்றும் பி.வாசு தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel