சென்னை:
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இளைஞர்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘‘ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட தாக்குதலில் இளைஞர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர்.
அவர்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். அத்துடன் தேவை ஏற்பட்டால் தான் அரசியலுக்கு வரத் தயார். இளைஞர்கள், மாணவர்கள் முடிவெடுத்தால் அனைத்து தொகுதியிலும் அரசியலில் நிற்போம்
. நாங்கள் வரவேண்டுமா இல்லையா என்பதை இளைஞர்கள்தான் முடிவு செய்வார்கள்’’ என்றும் கூறினார்.
Patrikai.com official YouTube Channel