பாரிஸ்: பிரெஞ்சு ஓபனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்பெயினின் ரஃபேல் நாடல்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் அமெரிக்காவின் செபஸ்டியன் கோர்டாவுடன் மோதினார் நாடல். இப்போட்டியை 6-1, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் 14வது முறையாக பிரெஞ்சு ஓபன் காலிறுதியில் நுழைந்தார் அவர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், 4வது சுற்றுப் போட்டியில் ஆடிய ருமேனியாவின் சிமோனா ஹாலெப், போலந்தின் இகா ஸ்வியாடெக்கிடம் 1-6, 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதன்மூலம் காலிறுதிக்கு முன்னேறினார் இகா.
மற்றொரு போட்டியில், உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, பிரான்சின் கரோலினா கார்சியாவை தோற்கடித்து, காலிறுதிக்கு முன்னேறினார்.