டில்லி:
ரஃபேல் போர் விமானம் வாங்க பிரான்ஸ் அரசுக்கு டசால்ட் நிறுவனம் குறைந்த விலையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் போடப்பட்டுள்ள விமான ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரான்ஸ் அரசு, எப்4 ரக மேம்படுத்தப்பட்ட நவீன ரக ரஃபேல் போர் விமானம் வாங்க டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி 28 எப்4 ரக விமானம் வாங்க ரூ. 2.3 பில்லியன் டாலர் அளவில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது பல்வேறு யூகங்களை எழுப்பி உள்ளது.
இந்த கணக்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு மார்க்சிய கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரி வுலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவுக்கு 36 ரஃபேல் போர் விமானம் வாங்க 7.87 பில்லியன் ரூபாய் என மோடி அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு வாங்குவதை விட நவீன ரக எப்4 ரக மேம்படுத்தப்பட்ட ரஃபேல் விமானம் வாங்க பிரான்ஸ் அரசு 2.3 பில்லியனுக்கு 28 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
28 விமானங்கள் வாங்க 2.3 பில்லிய்ன் ரூபாய் என்கிறபோது, 36 விமானங்களுக்கு 7.87 பில்லியன் ரூபாய் என்பது….கேள்விக்குறியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று… இந்த கணக்கு என்ன? என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் அல்லது அவரது கட்சியினர் விளக்குவார்களா? என்று மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிதலைவர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பி உள்ளார்.