டில்லி:

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இடையிலான வார்த்தை போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

டில்லியில் நடந்த நியூஸ் 18 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிர்மலா சீத்தாராமன், ‘‘ரபேல் போர் விமான கொள்முதலில் எங்களது விலை, உங்களது விலை என்று எதுவும் இல்லை. நீங்கள் எதாவது வாங்கியிருந்தால் தானே விலை குறித்து கூற முடியும்’’ என்று குறிப்பிட்டார்.

இதற்கு ராகுல்காந்தி பதில் கூறுகையில், ‘‘அரசு, ‘அவர்களின் விலையை’ செலுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ரபேல் விமான கொள்முதலுக்கு அரசு கொடுத்துள்ள விலை குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கூடுதல் நிதி ஆதாரம் வேண்டும் என்று ராணுவம் கூறி வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் மூலம் ரூ. 36 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.

ஒரு ரபேல் விமானம் காங்கிரஸ் ஆட்சியில் ரூ.526 கோடிக்கு பேரம் பேசி வாங்கப்பட்டது. ஆனால், தற்போது மோடி இதற்கு ஆயிரத்து 670 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார் ரூ. 40 ஆயிரம் கோடி இழப்புக்கு யார் பொறுப்பு? நாங்கள், ‘எங்கள் விலையை’ கொடுத்தோம். ஆனால் ‘அவர்களின் விலையை’ பற்றி யார் கவலைபட்டது?. இதற்கு பதில்.. மக்கள் தான் கவலை அடைவார்கள்’’என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையான விசாரணைக்கு அமைச்சகம் தயாரா என்று நிர்மலா சீத்தாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ‘‘விசாரணை.. என்ன விசாரணை?. ஒப்பந்தத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். அதில் எதுவும் கண்டுபிடிக்க முடியாது. அதில் முறைகேடு இல்லை. அதனால் விசாரணை நடத்த அவசியம் எழவில்லை’’என்று அமைச்சர் பதிலளித்தார்.