டில்லி:

ஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், பிரதமர்  மோடியை விசாரியுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நேற்று நடைபெற்ற வழக்கில், ஆவணங்கள் திருடு போய்விட்டதாக மத்திய அரசு தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,  ரஃபேல் ஆவணங்கள் திருட்டை விசாரிப்பதற்கு முன் பிரதமர் அலுவலக தலையீட்டை விசாரிக்க வேண்டும் என்றும், ரஃபேல் ஒப்பந்தம் மூலம் பிரதமர் மோடி ரூ.30000 கோடியை திருடிவிட்டார்,  எனவே பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ரஃபேல் ஆவணங்களை காணவில்லை என்று அரசு கூறுகிறது. அப்படியென்றால் வெளியான ஆவணங்கள் எல்லாம் உண்மையானதுதானே…. மோடி  அரசே இதை இப்போது ஒப்புக்கொண்டு இருக்கிறது. ஆகவே பிரதமர் மோடி ரஃபேலில் தனியாக பேரம் பேசியதும் உண்மைதான் என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

ரஃபேல் ஆவணங்களை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறிய ராகுல், அதில் தவறு ஏதும் கிடையாது.. இந்த விவகாரத்தில் சட்டப்படி செயல்படுங்கள். அதே சமயம், ரஃபேல் விவகாரத்தில், பிரதமர் மோடி குறித்தும்  விசாரணை நடத்த வேண்டும், ஏனென்றால்,  பிரதமர் மோடி ஏன் ரபேலில் தனியாக பேரம் நடத்தினார்.. அதை விசாரிக்க வேண்டும் என்றார்.

இந்த விவகாரத்தில், ரஃபேல் ஆவனங்களை  செய்தியாளர்கள் திருடிவிட்டதாக,  அரசு குற்றஞ்சாட்டுகிறது. ஆனால்,  பிரதமர் மோடி ரூ.30,000 கோடியை திருடிவிட்டார்.. முதலில் பிரதமர் மீது விசாரணை நடத்த வேண்டும். அதன்பின் ரபேல் ஆவணங்களை திருடியவர்களை விசாரிக்கலாம் என்று கூறினார்.

தொடர்ந்து விமானப்படை தாக்குதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல், அதுகுறித்து நான் அதிக பேச விரும்பவில்லை நான் எந்த கேள்வியும் கேட்கவில்லை. கேள்வி கேட்பது சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்கள்தான். நீங்கள் நடத்திய தாக்குதலை குறித்து அவர்கள்தான் விவரங்கள் கேட்கிறார்கள். நாங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறோம், எங்களுக்கு ஆதாரங்களை காட்டுங்கள் என்று அவர்கள்தான் கேட்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இப்பபோது பாகிஸ்தானை சாடும் மோடி, ஏற்கனவே முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பிறந்தநாளில் பிரதமர் திடீரென சென்று வாழ்த்தியவர்தான் என்பதை நினைவு கூர்ந்தார்.  பாகிஸ்தானின் போஸ்டர் பாயாக இருந்தது பிரதமர் நரேந்திர மோடி தான் என்றும் குற்றம் சாட்டினார்.

கூட்டணி குறித்த கேள்விக்கு,  எங்களது தேர்தல் கூட்டணி சிறப்ப இருந்து வருகிறது… பல இடங்களில் நாங்கள் மிகவும் வலுவாக இருக்கிறோம் என்றார்.