டில்லி:
ரஃபேல் சீராய்வுமனு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் மத்தியஅரசு உச்சநீதி மன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. வழக்கு தொடர்பாக புதிய பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யவிருப்பதால் ஒத்தி வைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டில் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இதில்,முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இதையடுத்து, ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த கோரி மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷவ்ந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதா விசாரணையை தொடர்ந்து, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடு இருப்பதாக தெரிய வில்லை என்பதால் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என கடந்த ஆண்டு டிச., 18ம் தேதி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சீராய்வு மனுக்க முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷவ்ந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கிஷன் கவுல், ஜோஸப் ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது.
வழக்கின் கடந்த விசாரணையின்போது, பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்ட ரஃபேல் ஆவணங்களின் அடிப்படையில் இந்த மனு, தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறியது பெரும் பரபரப்பானது. இது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. முதலில் ஆவணங்கள் திருடுபோனதாக கூறிய வழக்கறிஞர் பின்னர் நகல் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அதன் காரணமாக சீராய்வு மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஏற்கக் கூடாது என வாதிட்டார்.
ஆனால், நீதிபதிகள் மத்தியஅரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுத்து, . சீராய்வு மனு தாரர்கள் தாக்கல் செய்த 3 ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என அறிவித்தனர்.
இந்த நிலையில், ரஃபேல் மேல்முறையீடு வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், ரபேல் முறைகேடு வழக்கில் புதிதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணையை ஒத்திவைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.