தமிழக அரசு மருத்துவமனைகளில் . சேலம் அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தையை காண வில்லை என புகார் கொடுக்கப்பட்டது, அதே வருடத்தில் திருச்சி அரசு மருத்துவமனையிலும், விஜயவாடா மருத்துவமனையிலும் குழந்தை காணாமல் போனதாக சொல்லப்பட்டது.
இச்சிக்கல்களுக்கு தீர்வாக தமிழக அரசு வானொலி அலைவரிசை அடையாள தொழில்நுட்பத்தினை( RFID-Radio-frequency identification) கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் புதிதாக பிறந்த குழந்தையின் கணுக்காலில் ஒரு சிறிய RFID அடையாள அட்டை கட்டப்படும். இந்த அடையாள அட்டையுடன் குழந்தையின் தாய்க்கும், உடன் ஒரு பார்வையாளருக்கும் RFID அட்டை வழங்கப்படும். இதன்பின் குழந்தையை யாரேனும் வாசல்பகுதிக்கு எடுத்துக்கொண்டு செல்லும்போது யாரிடமாவது குழந்தைக்கு கொடுத்த RFID அடையாள அட்டை இல்லாவிடில் அங்கே உள்ள அலாரம் தொடர்ந்து ஒலிக்கப்படும், இதன் மூலம் குழந்தைகள் திருட்டினை தடுக்கமுடியும்.
இத்தொழில்நுட்பம் நமக்கு மிகத்தெரிந்த தொழில்நுட்பம்தான். பல்பொருள் அங்காடியில் நீங்கள் வாங்கிய பொருளுக்கு பில் வாங்காமல் கொண்டுபோனால் அங்காடியின் வாசலில் உள்ள கருவி தொடர்ந்து ஒலிந்து எச்சரிக்கை கொடுக்கும். அதேநுட்பம்தான் இங்கே பயன்படுத்தப்படுகிறது.
இத்தொழில் நுட்பம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்தமாதம் நிறுவப்பட்டது. இத்தொழில்நுட்பம் இங்கே வெற்றிபெறுமானால் தமிழகத்தில் எல்லா முக்கிய மருத்துவ மனைகளிலும் இத்தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது.
-செல்வமுரளி