1978ம் ஆண்டு வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ராதிகா சரத்குமார்.

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடிக்க வைத்தவர் பாரதிராஜா. இன்று அப்படத்தின் சில புகைப்படங்களை பகிர்ந்த ராதிகா, “கிழக்கே போகும் ரயில்’, படத்தின் முதல் நாள் மற்றும் கடைசி நாள் படப்பிடிப்புப் புகைப்படங்கள். அடுத்த படம், லிப்ஸ்டிக்கை தொந்தரவு செய்யாமல் சிரிப்பதற்காக நான் எடுத்துக் கொண்ட பயிற்சி, இனிமையான நினைவுகள்” என தன்னுடைய புகைப்படத்தைப் பற்றி அவரே கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.

அதற்கு அழகிய நினைவுகள். மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ வேப்பம்தோப்பு குயில்தானோ. பாஞ்சாலியாக வலம்வந்து எங்ககளை இன்றும் ஆட்கொண்டு இருக்கும் கலையரசி நீ என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

[youtube-feed feed=1]