கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரதமர் மோடி நேற்று (மார்ச் 24) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அதில், “அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த முடிவுக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்து, தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்த ராதிகா: நமது நன்மைக்காக 3 வாரங்கள் பூட்டு. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். இது உங்கள் நன்மைக்காகவும், உங்கள் குடும்பம் மற்றும் அன்பானவர்களின் பாதுகாப்புக்காகவும்தான். இந்தப் போரில் சண்டையிடுவோம் வாருங்கள்..என பதிவிட்டுள்ளார் .

[youtube-feed feed=1]