ஹரி உத்ரா இயக்கத்தில் ஆண்டனி சகாயராஜ், சிவா நிஷாந்த், ஐரா ஜெயின், திவ்யா ஏழுமலை உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கல்தா’.
இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், ராதாரவி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் ராதாரவி பேசியதாவது:
இந்தப் படத்தில், ‘அரசியல்வாதிகளா.. எல்லாரையுமாடா சாவடிப்பீர்கள்’ என்று ஒரு வசனம் இருக்கிறது. மக்கள் தான் அனைவரையும் சாவடிக்கிறார்களே.. தவிர அரசியல்வாதிகள் அல்ல. மக்களுக்கு எந்த இடத்தில் தட்டிக் கேட்க வேண்டும், எதைக் கேட்கக் கூடாது எனத் தெரியவில்லை.
பக்கத்து மாநிலத்திலிருந்து வந்து தமிழ்நாட்டில் குப்பை கொட்டுகிறார்கள். தற்கு எல்லாமோ போராடி 3, 4 கோடி கையெழுத்து எல்லாம் வாங்குகிறோம். குப்பை கொட்டக் கூடாது என்று கையெழுத்து வாங்க வேண்டியதுதானே.
அதே போல், கட்சி மாறிவிட்டார் ராதாரவி. பணம் வாங்கிவிட்டார் என்கிறார்கள். அதுவும் பாஜகவினர் பணம் தருவார்கள் என்று சொல்லலாமா? பாஜக பணம் தருகிற கட்சியா? பாஜக ஒரு தேங்காய்மூடி கட்சி. அவர்களுடைய எண்ணம் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்பதே. பாஜகவில் சிரமப்படுபவர்களும் இருக்கிறார்கள். சிலர் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள்”.என பேசியுள்ளார் .