சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு விவகாரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்-க்கும், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இடையே மீண்டும் லடாய் ஏற்பட்டுள்ளது, இன்றைய ராதாகிருஷ்ணனின் தகவலில் மீண்டும் அம்பலமாகி உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பாக நேற்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெற்ற பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

வீட்டில் தனிமைப்படுத்துவது ரத்தா? பிரகாஷ், ராதாகிருஷ்ணன் முரண்பட்ட தகவல்…

இதில் பேசிய பிரகாஷ், இனி வருங்காலங்களில் சென்னையில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்களில்,  வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டாலே, பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படு வார்கள் என்று கூறினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, சென்னை கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பதில் அளித்து உள்ளார்.

அப்போது, கொரோனா பரிசோதனை முடிவில் நெகடிவ் என முடிவு வந்து, அறிகுறி இருந்தால்தான் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கூறி உள்ளார்.

ஒரே விஷயத்தில், ஒரே நேரத்தில் இரு உயர்அதிகாரிகளும் மாறுபட்ட தகவல்களை தெரிவித்து வருவது தொடர்கதையாகி உள்ளது.
ஏற்கனவே  கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்துவது தொடர்பான விவகாரத்திலும்,  சென்னை மாநகராட்சி ஆணையார்  பிரகாஷ் ஒரு தகவலையும்,  ராதா கிருஷ்ணன் மாறுபட்ட தகவல்களையும் தெரிவித்து மக்களை குழப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.