கன்சாஸ்:
அமெரிக்காவில் உள்ள இரவு உணவு விடுதியில், அந்நாட்டு இனவெறியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் பலியாகி உள்ளார்.
அமெரிக்கா கன்சாஸ் மாகணத்தில் பொறியாளராக பணியாற்றுபவர் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ். இவர் அங்குள்ள மதுக்கூடம் ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது மதுக்கூடத்தில் புகுந்த அமெரிக்க இனவெறி நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் ஸ்ரீநிவாஸ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியவரை அமெரிக்க காவல்துறை கைது செய்துள்ளது. அவர் ஆடம் புரின்ட்டன் என்ற 51 வயது அமெரிக்கர் ஆவார். இவர் துப்பாக்கியால் சுடும்போது, “எங்கள் நாட்டை விட்டு வெளியேறு” கூறியபடியே சுட்டிருக்கிறார். மேலும், “அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே. பிறர் இங்கே வசிக்க்ககூடாது” என்று இனவெறி முழக்கங்களையும் எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போதே அவர் அமெரிக்க இனவெறியைத் தூண்டுபடி பேசினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. பொறுப்புக்கு வந்த பிறகும் இவரது நடவடிக்கைள் இனவெறியைத் தூண்டுவதாக இருக்கின்றன என்ற புகாரும் உண்டு. ஆட்சிக்கு வந்தவுடன், ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த மக்கள், அமெரிக்காவுக்குள் நுழையக்கூடாது என இவர் தடைவிதித்தார். சமீபத்தில், “உரிய விசா இல்லாதவர்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற வேண்டும்” என்று உத்தரவிட்டார். இதையடுத்து சுமார் ஒரு கோடி பேர் அமெரிக்காவைவிட்டு வெளியேற வேண்டிய நிலையில் இருக்கிறர்கள். இவர்களில் இந்தியர்கள் மூன்று லட்சம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், இந்தியர் மீது இனவெறித்தாக்குதல் நடந்துள்ளது.
“அமெரிக்க புதிய அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே இனவெறி தலைதூக்கியுள்ளது” என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
(படம் நன்றி: என்.டி.டி.வி.)
[youtube-feed feed=1]