அடங்க மறு, இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்தவர் ராசி கண்ணா. தற்போது அரண்மனை 3, சூர்யா 39 போன்ற படங்களில் பல படங்களில் நடிக்கிறார். இவரைப்பற்றி காதல் கிசு கிசு கிளம்பியது. நெருக்கமான ஒருவருடன் காதலில் விழுந்திருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்தார்.
அவர் கூறும்போது,’என் வருங்கால கணவருக்காக நான் இப்போதைக்கு எந்த இடஒதுக்கீடும் செய்யவில்லை. அதுபற்றி சிந்திக்கக்கூட நேரமில்லை என்பதுதான் உண்மை. என் முழுகவனமும் நடிப்பில் தான் இருக்கிறது. கொரோனா ஊரடங்கில் புத்தகங்கள் படிப்பததான் என் வேலை. எனவே என்னைப்பற்றி யாரும் வதந்தி கிளப்பாதீர்கள்’ என்றார் ராசிகண்ணா.