இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் ஒருசில மாநிலங்களில் முழு ஊரடங்கே நிலவி வரும் நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 20 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

இதில் திரையரங்குகளுக்கு 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி, தினசரி 3 காட்சிகள் மட்டும் அனுமதி, ஞாயிறு அன்று முழு ஊரடங்கால் திரையரங்குகள் திறக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திரையரங்குகளை மூடவும் அரசு உத்தரவு பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நெற்றிக்கண்’, த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ராங்கி’ ஆகிய திரைப்படங்கள் நேரடி ஓடிடி வெளியீட்டுக்காகத் தயாராகி வருகின்றன.

 

[youtube-feed feed=1]