அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ்.P.பிள்ளை தயாரிப்பில் உருவாகும் ரவுடி பேபி படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி.

இயக்குனர் J.M.ராஜ சரவணன் எழுதி இயக்கும் ரவுடி பேபி படத்திற்கு P.செல்லத்துரை ஒளிப்பதிவு செய்கிறார். ரவுடி பேபி படத்திற்கான பாடல்களை வைரமுத்து எழுத இசையமைப்பாளர் சாம்.C.S. இசையமைக்கிறார்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட ரவுடி பேபி திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை ராய் லக்ஷ்மி இன்று ஹன்சிகாவின் ரவுடிபேபி படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களோடு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]