ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டியின் முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ்லாந்தில் டிசம்பர் 8 ம் தேதி துவங்கியது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 147 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 297 ரன்களும் எடுத்தது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 425 ரன்கள் எடுத்தது, 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்று நடந்த நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 5.1 ஓவரில் 20 ரன்கள் என்ற இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

முதல் நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆலவுட் ஆனது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட குயின்ஸ்லாந்து மாகாண போலீசார் “பேட்டிங் எப்படி செய்வது என்பது குறித்து நையாண்டி செய்யும் நபர்கள் குறித்து விசாரணை செய்யப்படும்” என்று இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை கலாய்த்தனர்.

மேலும், 5 விக்கெட் எடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் சிறப்பாக பந்து வீசிய லியோன் மற்றும் க்ரீன் ஆகியோர் குறித்தும் தனது ட்விட்டரில் பதிவிட்ட போலீசார் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் அதிரடியாக விளையாடி 94 ரன்கள் குவித்த வார்னர் குறித்தும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது.