லண்டன்: கர்சர்வேடிவ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெளியுறவுத்துறை செயலர் லிஸ்டிரஸ்-ஐ இங்கிலாந்து ராணி எலிசபெத், நாட்டின் புதிய பிரதமராக பங்கிங்காம் அரண்மனை மரபுபடி அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து,  அந்நாட்டு வழக்கப்படி புதிய பிரதமர் பதவிக்கு, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பல கட்டங்களாக  நடைபெற்று வந்தது. இறுதி போட்டியில்  இந்திய வம்சா வழியைச்சேர்ந்த ரிஷி சுனக்குக்கும், வெளியுறவுத்துறை செயலராக இருந்த லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடுமையான  போட்டி நிலவியது.  இதில் சுமார் 20ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, அவர் இன்று புதிய பிரதமராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக, இங்கிலாந்து நாட்டு வழக்கப்படி, முதல் குடிமகனாக இருக்கும், அந்நாட்டு ராணிதான்  பிரதமர் பதவிக்கான அறிவிப்பை வெளியிடுவார். அதாவது, மரபுப்படி புதிய பிரதமரை பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து அறிவிக்க வேண்டும்/  அதன்படி, இன்று கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ். இங்கிலாந்து ராணி எலிசபத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து, லிஸ் டிரஸ்-ஐ  இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மரபுப்படி புதிய பிரதமராக அறிவித்தார்.

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வானார்…

[youtube-feed feed=1]