பினோம்பென்

கம்போடியா அரசு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களைத் தனிமைப்படுத்தும் முறையை நாளை முதல் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

கம்போடிய அரசு கொரோனா பரவலைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுத்தது.   அவ்வகையில் கம்போடியாவுக்கு வரும் வெளிநாட்டவர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கம்போடியா திரும்பும் உள்நாட்டினர் ஆகியோருக்கு தனிமைப்படுத்தல் கட்டாயம் ஆக்கப்பட்டது.   மேலும் நாட்டில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக்கப்பட்டது.

கம்போடியாவில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.  இந்நாட்டில் மொத்த மக்கள் தொகை சுமார் 1.6 கோடி பேர் ஆகும்.  இவர்களில் 90%க்கு மேற்பட்டோர் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  இதையொட்டி கம்போடியா அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது.

அவற்றில் ஒன்றாக நாளை அதாவது நவம்பர் 15 முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட வெளிநாட்டவர் மற்றும் உள்ளிட்டவருக்குத் தனிமைப்படுத்தல்  தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.   தற்போது தனிமையில் உள்ள தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவரும் நாளை முதல் நாட்டுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும் எனவும் உத்தரவு இடப்பட்டுள்ளது.