டில்லி

2018ம் ஆண்டுக்கான க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா மீண்டும் பின்தங்கியுள்ளது. 25 பாடப் பிரிவுகளில் ஐஐடி மிகவும் பின் தங்கியுள்ளது. 48 பாடப் பிரிவுகளில் 80வது இடத்தை பிடித்துள்ளது. 5 பாடங்களில் மட்டுமே ஐஐடி முன்னேற்றத்தை சந்தித்துள்ளது.

பெங்களூரு ஐஐஎஸ்சி.யின் செயல்பாடுகளை பொருத்தவரை 33 பாடங்களில் பின் தங்கி, 5 பாடங்களில் மட்டும் முன்னேற்றத்தை காட்டியுள்ளது. மேலும், 14 பாடங்களின் பட்டியலில் ஐஐஎஸ்சி இடம்பெற்றது. இதில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 11 பாடங்களில் சிறிய அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. சிவில், ஸ்ட்ரக்சுரல், மெக்கானிக்கல், ஏரோனாடிக்கல், உற்பத்தி பொறியியல் துறைகளில் முந்தைய நிலைய தக்கவைத்துள்ளது.

ஐஐடி பாம்பே, 21 பாடங்களின் தர வரிசையில் இடம்பெற்றுள்ளது. இயற்பியல் மற்றும் வானியல், புள்ளியியல், செயல்பாட்டு ஆராய்ச்சி, கணிதம், சுற்றுசூழல் அறிவியல் மற்றும் உயிரியல் அறிவியல் ஆகிய 5 பாடங்களில் சரிவை சந்தித்துள்ளது.

ஐஐடி டில்லி கெமிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் மற்றும் உயிரியல் அறிவியல் ஆகிய பாடங்களில் சரிவை சந்தித்துள்ளது. முதன் முறையாக மொழியியல் பாடத்தில் இடம்பிடித்துள்ளது. 13 பாடங்களில் ஐஐடி கான்பூர் மெக்கானிக்கல் மற்றும் ஏரோனாடிக்கல் உற்பத்தி, இயற்பியல் மற்றும் வானியலில் ஆகிய 2 பாடங்களில் மட்டுமே இடம்பிடித்துள்ளது. இதன் செயல்பாட்டில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஐஐடி காராக்பூர், 4 பாடங்களில் சரிவை சந்தித்துள்ளது. சமூக அறிவியலில் முதன்முறையாக இடம் பிடித்துள்ளது. ஐஐடி சென்னை, , 15ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ், உயிரியல் அறிவியல், வேதியியல், கணிதம், இயற்பியல், வானியல் ஆகிய 5 பாடங்களில் சரிவை சந்தித்துள்ளது. ஐஐடி ரூர்கி, 10 பாடங்களில் 3ல் மோசமான செயல்பாட்டை சந்தித்துள்ளது. ஐஐடி கவுகாத்தி 8 பாடங்களில் 3ல் சரிவை சந்தித்துள்ளது.

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்கில் 10 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளது. 20 ஐஐஎம்.களில் அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூரு ஆகிய 3 மட்டுமே இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஜேஎன்யூ 8ல் 2 பாடங்களிலும், டில்லி பல்கலைக்கழகம் 21ல் 4 பாடங்களிலும் சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவின் 25 கல்வி நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பல்வேறு பாடங்களில் 142 தர வரிசையில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதில் 9 குறைவாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் 14 பாடங்களில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. மாசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 12 பாடங்களில் முன்னிலை வகித்து 2ம் இடத்தை பிடித்துள்ளது. இவை தவிர ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 4 பாடங்களில் முதலிடம் பிடித்து முன்னணி பட்டியலில் இடம்பிடித்துள்ளது.