சவுதி:
உறவை மீண்டும் புதுப்பிக்க 13 நிபந்தனைகளை அரபு நாடுகள் கத்தாருக்கு விதித்தது. ஆனால் இதை ஏற்க கத்தார் மறுத்துவிட்டது.

தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறி கத்தார் உடனான உறவை சவுதி அரேபியா, எகிப்து, ஏமன், ப க்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 7 நாடுகள் துண்டித்தன. பொருளாதார தடை விதித்ததால் உணவு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் கிடைப்பதில் அந்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கத்தாருக்கு அந்நாடுகள் தரைவழி, வான்வழி போக்குவரத்தையும் துண்டித்ததால் கத்தார் சில நாட்களாக தனித்து விடப்பட்டுள்ளது. அங்கு நிலவிவரும் அசாதாரண சூழலால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையானோர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.

துண்டிக்கப்பட்ட உறவை புதுப்பிக்க கத்தாருக்கு அரபு நாடுகள் 13 நிபந்தனைகள் விதித்துள்ளன. இது தெ £டர்பாக கத்தாருக்கு அரபு நாடுகள் அனுப்பிய கடிதம் வெளியாகியுள்ளது. கத்தாருக்கும், வளைகுடா நா டுகளுக்கும் இடையில் சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் குவைத் மூலம் இந்த பட்டியல் கத்தாருக்கு அளிக்கப்பட்டுள்ளது

அந்த நிபந்தனை பட்டியலில்…

* கத்தாரில் செயல்பட்டு வரும் அல் ஜசீரா தொலைகாட்சியை மூட வேண்டும்.

* கத்தாரில் செயல்படும் துருக்கி ராணுவ தளத்தை மூட வேண்டும்

* ஈரானுடனான உறவை துண்டிக்க வேண்டும். ஈரானின் புரட்சிகர காவலில் உள்ள உறுப்பினர்களை வெளியேற்றவும், ஈரானுடனான எந்தவொரு கூட்டு ராணுவ ஒத்துழைப்பையும் அளிக்காமல் குறைக்க வேண்டும்

* பயங்கரவாதிகளுக்கு அளிக்கும் ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும்.

* கத்தார் மண்ணில் உள்ள தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும்

* சமீபத்திய ஆண்டுகளில் கத்தார் கொள்கைகள் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கள் மற்றும் பிற இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

* சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து, பஹ்ரைன், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட தனிநபர்கள், குழுக்கள் அல்லது அமைப்புகளுக்கு நிதியளிக்கும் அனைத்து வழிமுறையையும் நிறுத்த வேண்டும்

* கத்தார் நாட்டில் உள்ள துருக்கி ராணுவத்தை உடனே வெளியேற்ற வேண்டும். கத்தார் நாட்டினுடனான எந்த ஒரு கூட்டு ராணுவ பயிற்சிக்கும் இனி துருக்கியுடன் சேர கூடாது

உள்ளிட்ட 13 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகள் அடங்கிய பட்டியல் கத்தார் வசம் ஒப்பைடைக்கப்பட்ட 10 நாட்களுக்குள் அந்நாடு இதற்கெல்லாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்த பட்டியல் அதன் பிறகு செல்லாது மற்றும் மாற்றத்திற்குட்பட்டது என கூறப்பட்டுள்ளது.

ஆனால் தங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை மற்ற அரபு நாடுகள் நீக்காத வரை பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்று கூறி நிபந்தனைகளை கத்தார் வெளியுறவுத் துறை நிராகரித்துள்ளது.