இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அந்நிய செலாவணி மதிப்பை பாதுகாக்கும் பொருட்டு, கத்தார் நாட்டிலிருந்து தருவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையின் ஒரு பகுதி, பாகிஸ்தானுக்கு வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தொகை அடுத்த சில நாட்களுக்கு பாகிஸ்தானில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலிருந்து 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதையடுத்து, கத்தார் நாட்டிலிருந்து மேற்குறிப்பிட்ட உதவித்தொகையும் வந்து சேர்ந்துள்ளது.

பாகிஸ்தான் ஏற்கனவே சீனாவிடமிருந்து 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை கடனாகப் பெற்றிருந்தது நினைவிருக்கலாம். பணம் வழங்கல் நிலுவை சிக்கலைத் தவிர்க்கும் பொருட்டு, தனது நட்பு நாடுகளிடம் பாகிஸ்தான் உதவி கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு சென்றடைந்த தொகை குறித்து கத்தார் நாட்டின் மத்திய வங்கி எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டது. மேலும், இதுதொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

[youtube-feed feed=1]