டெல்லி: கத்தார் நாட்டில், 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்களுக்கு விதித்த மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் குறைத்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்து உள்ளது.
கத்தார் நாட்டில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த அக்டோபர் மாதம் கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. . உளவு பார்த்ததாகக் கூறப்படும் கத்தாரின் முதன்மை நீதிமன்றத்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது . இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரிகள் அல் தஹ்ரா நிறுவனத்தில் கத்தார் அதிகாரிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் பணிபுரிந்தனர், அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு திடீரென கத்தார் காவல்துறை அதிகாரிகளால், கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, ப்ளூம்பெர்க் இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு பெயரிடப்படாத நபரை மேற்கோள் காட்டி, எட்டு பேரும் கட்டார் கடற்படைக்கு எதிராக பயிற்சி அளிப்பதில் ஈடுபட்டனர் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இது சலசலப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. மேலும், இந்திய முன்னாள் கடற்படையினல் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று கூறப்பட்டது. “இவர்கள் அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தோஹா சென்றனர். அவர்கள் ஏன் உளவு பார்க்கிறார்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதையடுத்து, முன்னாள் கடற்படை ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டை டெல்லி இப்போது பரிசீலித்து வருவதாக கூறப்பட்டது. தொடர்ந்து 8 பேரின் மரண தண்டனையை எதிர்த்து, கடந்த மாதம் கத்தார் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்திய கடற்படையைச் சேர்ந்த 8 முன்னாள் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று (டிச.28) மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 8 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.மேலும், கத்தாரில் உள்ள இந்தியத் தூதர், இந்திய அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் மத்திய வெளியுறவுத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு விசாரணையின்போது நீதிமன்றத்தில் இருந்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் நீதிமன்றத்தின் விரிவான தீர்ப்பிற்காக காத்திருப்பதாகவும், சட்டக்குழு மூலம் முழு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.