ஐதராபாத்:
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக பிரபல பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
சீனாவின் கொரோனா இந்தியா உள்பட உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வருகிறது. நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24ந்தேதி நள்ளிரவு தொடங்கி உள்ள இநத் ஊரடங்கு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு இதுவரை 664 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கையும் 16 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று நடவடிக்கைக்கு பிரபல பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து ரூ.10 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்து உள்ளார். இதில், ரூ.5 லட்சம் ஆந்திராவுக்கும், ரூ.5 லட்சம் தெலுங்கானா மாநிலத்துக்கும் ஒதுக்கி உள்ளார்.