மாஸ்கோ

ஷ்ய அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் புதின் வெற்றி உறுதியாகி உள்ளது.

நேற்றுடன் ரஷ்யாவில் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான பொது தேர்தல் முடிவுக்கு வந்தது. இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது. நேற்று நடைபெற்ற ரஷிய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக முதல் அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனவே ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புதின் மீண்டும் அதிபராகும் வாய்ப்பு உறுதி ஆகி உள்ளது.  ரஷ்ய அரச் வருகிற மே மாதம் 7-ந்தேதி புதிய அதிபருக்குப் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அதிபரின் பதவிக் காலம் 4 ஆண்டுகளாக இருந்த நிலையில், அது புதின் பிரதமராக இருந்த போது 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. எனவே புதின் சாகும் வரை ரஷ்யாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததாக அப்போது பலரும் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.