ஓடிடி தளங்கள் வந்த பிறகு தமிழில் ஆந்தாலஜிகள் அதிகம் எடுக்கப்பட ஆரம்பித்தன. 2020 இல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான ஆந்தாலஜிதான் புத்தம் புதுக் காலை.

சுதா கொங்கரா, கௌதம் வாசுதேவ மேனன், சுஹாசினி, ராஜீவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் ஐந்து தனித்தனி கதைகளை இயக்கியிருந்தனர்.

இந்நிலையில், புத்தம் புதுக்காலை இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் அமேசான் பிரைம் வீடியோ வெளியிடுகிறது. முதல் ஆந்தாலஜியில் இயக்குனராக பங்களிப்பு செய்த யாரும் இதில் இல்லை.

ஹலிதா, பாலாஜி மோகன், மதுமிதா ஆகியோருடன் மணிரத்னத்தின் உதவி இயக்குனர் ரிச்சர்ட், புஷ்கர் – காயத்ரியின் உதவி இயக்குனர் சூர்யா ஆகியோரும் தலா ஒரு குறும்படத்தை இயக்குகின்றனர். அர்ஜுன் தாஸ், லிஜோ மோள் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.