தராபாத்

புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி கிட்டத்தட்ட ரூ. 350 கோடி மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

தற்போது புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இதி ‘புஷ்பா 2 தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்து தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புஷ்பா 2 வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் திரைப்படத்தின் முன்னோட்ட பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த்த் திரைப்படத்தை திட்டமிட்ட நாளில் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும். ‘புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 06-ம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.