புவனேஸ்வர்: குஜராத்தில் யானை மீது ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

குஜராத்தின் சூரத் செல்லும் பூரி – துர்க் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் ஒன்று ஒடிசாவின் சம்பல்பூரில் உள்ள ஹதிபரி நிலையத்திலிருந்து புறப்பட்டது. ஹதிபரி – மானேஸ்வர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது யானை ஒன்று ரயில் பாதையை கடக்க முயன்றது.
ஆனால், யானை மீது ரயில் லேசாக மோத விபத்து நிகழ்ந்தது. அதிர்ச்சிடைந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். அதனால் ரயிலின் இன்ஜின் பகுதியின் சக்கரங்கள் தடம் புரண்டன.
விபத்தினால் பயணிகள் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. 6 சக்கரங்கள் மட்டுமே தடம் புரண்டதால் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. பயணிகள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
[youtube-feed feed=1]