சென்னை: தமிழ்நாட்டுக்கு தேவையான சுமார் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு  மீண்டும் டெண்டர் கோரி உள்ளது.

தமிழ்நாடு அரசு  ஸ்மார்ட் மீட்டர்  வாங்க இருந்த அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும்,  தொழிலதிபர் அதானி மீதான சர்ச்சைகள் காரணமாக, தமிழ்நாடு அரசு  ஸ்மார்ட் மீட்டர்  வாங்க இருந்த அதானி நிறுவனத்துடனான டெண்டரை கடந்த ஜனவரி மாதம்  ரத்து செய்தது. இதனால்,  தமிழக அரசுக்கு  மத்தியஅரசு வழங்கும்  ரூ 39,000 கோடி  கிடைக்காது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மீண்டும்,   மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ. 20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரி உள்ளது. ஒரு மாதத்தில் டெண்டர் நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டு, விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் தொடங்கவுள்ளன.

தமிழகத்தில் 2026-க்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ள நிலையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மீண்டும் டெண்டர் கோரி உள்ளது.

மிழ்நாட்டில் உள்ள வீடுகள் உள்ளிட்ட மின் இணைப்புகளில் மின்நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், மின் இழப்பை தடுக்கவும், மின் கணக்கீட்டில் நிகழும் முறைகேடுகளை தடுத்து வருவாய் அதிகரிக்கும் நோக்கில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அனைத்து மாநில மின்வாரியங்களையும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், 2026-ம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்துள்ளது. அதற்குள் இத்திட்டத்தை நிறைவேற்றினால், மத்திய அரசு தரும் நிதியுதவி மானியமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, மீண்டும் செலுத்தத் தேவையில்லை. இல்லையெனில், அது கடனாக மாற்றப்பட்டு மீண்டும் திருப்பி செலுத்த வேண்டும். அதன்படி, தமிழக மின்வாரியம் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த மீண்டும் முடிவு செய்துள்ளருது.

இதுதொடர்பாக , அண்மையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் 128-வது வாரிய கூட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்காக புதிய டெண்டர் விட ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விடுவதற்கான அறிவிப்பை மின்வாரியம் நேற்று  (மார்ச் 12) வெளியிட்டுள்ளது. 6 பேக்கேஜ்களாக இந்த டெண்டர் விடப்பட்டு ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்யப்பட உள்ளது. அதன்படி, ரூ.20 ஆயிரம் கோடி செலவில் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்கப்பட உள்ளது.