கொடுத்த வாக்கை மறந்த எம்.ஜி.ஆர்.?
1962ம் அண்டு ஹைதிராபாத்திலிருந்து நான் மதுரைக்கு மாற்றலாகி வந்தேன். 1960 அல்லது 1961 ஆக இருக்கலாம் .மதிப்பிற்குறிய எம்.ஜி ஆர் அவர்கள் படப்பிடிப்புக்காக ஹைதிராபாத் வந்திருந்தார்கள்.
நடராஜ் என்பவர் தயாரிப்பாளர் .படத்தின் பெயர் நினைவிலில்லை. அதில் வைஜயந்தி மாலா அம்மையார் நடித்ததாக நினைவு. .
அப்போது ஹைதிராபாத்தில் south indian cultural association என்ற அமைப்புஇருந்தது திவான் பகதூர் ஆரவாமுத அய்யங்கார், ஜஸ்டிஸ் சீனிவாசன் போன்றோர் தலைவர்களாக இருந்து வநத காலம். என்னை மாதிரி பொடியன்கள் அதன் செய்ல்வீரரகள்.
எழுத்தாளர்கள் தி.ச.ராஜு ,சுபஸ்ரீ போன்றவர்கள் எங்கள வழிநடத்தினார்கள். சேங்காலிபு ரம்,பாலகிரு ஷ்ன சாஸ்திரிகள் என்று இருந்த சங்கத்தை, நல்லபாடகர்கள், நாடகங்கள் ஆகியவற்றை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரினோம்.சங்கத்தின் உட்கிளையாக பாரதி அரங்கம் தோன்றியது.
ரயில்வேயில் வேலை பார்க்கும் ராஜாமணி, தொலைபேசி நிறுவனத்தில் வேலை பார்த்த ராமமூர்த்தி, ,நெல்லை ஆறுமுகம் என்று ஒரு ஜமா சேர்ந்து எம்.ஜி.ஆர் ( MGR ) அவர்களை பார்க்க சென்றோம்.
சரோஜினி சாலைக்கு எதிர்புரம் உள்ள குதிரைப் பந்தய மைதான கரையில் இருந்த பெரிய விடுதியில் அவர்தங்கீருந்தார். இரவு எட்டு மனக்கு மேல் சென்று சந்தித்தோம்.
“என்ன தேஜஸ். எழுமிச்சம்பழ கலர் உடம்பு தங்கமாக ஜொலிக்கிறது. கடகட வென்ற சிரிப்பொலி யோடு அவர் எங்களை வரவேற்றார். அந்த ஹோட்டலில் குடிக்க தனியாக ஏற்பாடு உண்டுகுடியின் கேடு பற்றி எங்களுக்கு எடுத்துச் சொன்னார்..எங்களுக்கு அவர் பேச பேச உற்சாகம் .எங்கள் நண்பர் ஒருவர் அந்த உற்சாகத்தில், “நீங்க வந்திருப்பது தெரியாது. முன்னமேயெதெருந்திருந்தால் ஓர் வரவேற்பு ஏற்பாடு செய்திருப்போம்” என்று கூறினார் அதனால் என்ன ? நீங்கள் ஏற்ப்பாடுசெய்யுங்கள் . நான் மூன்று நாளிருப்பேன் நான் வருகிறன்” ‘என்றார்.
பெரியவர்களை கலந்துகொண்டு அவ்ர்களின் வேண்டா வெறுப்ப வாங்கிக்கட்டிக்கொண்டு பஷீர் பாக்ருகில் உள்ள உருது கல்லூரி ஹாலில் வரவேபு நகழ்ச்சியை நடத்தினோம்..
IA AND A S பரீட்சையில் தேர்வு பெற்று உதவி தணிக்கை அதிகாரியாக இருந்த இளைஞர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.
நடிப்பு பற்றி எம்.ஜி.ஆர் அவர்கள் அருமையான சொற்பொழிவு ஆற்றினார். குறிப்பாக நடிகனு ம் பாத்திரமும் அன்னியமாகி நிற்கவேண்டும் என்பது பற்றி alieanation theory பற்றி விளக்கினார் . மதராசில் உள்ள நடிகர் சங்கம் பற்றிகுறிப்பிட்டார் . நீங்கள் நாடகம் போடுவதாக கூறினார்கள்.நீங்களும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகலாம் . நடிகன் குரல் என்று பத்திரிக்கை நடத்துகிறோம்.அதிலும் சந்தாதாரராக ஆகுங்கள் என்று கேட்டுக் கொண்டார்
இறுதியில் எங்கள் அமைப்புக்கு 10,000 ரூ நன்கொடை அனுப்புவதாகவும் சொன்னார்.
நாங்கள் உறுப்பினரானோம். நடிகன் குரல் சந்தாதாரரானோம். ” வரவேற்றுப் க்கு 300 ரூ தண்டம் நு சொன்னவங்கலீடம் பத்தாயிரம் வரட்டும்டா உங்க முஞ்சியில 300 ஒவாயை எரீயிறோம் என்று பேசினோம்.
இரண்டு மாதங்களாயிற்று. பணம் வரவில்லை . சென்னை சென்று பார்த்தேன்.அவரைப் பார்க்க முடியவில்லை. உள்ளேயே வட வில்லை.
அப்போதெல்லாம் அம்பாசடர் காருக்கு 50காசு மினிமம்..பெபிடாக்சி என்பார்கள் .அதற்கு 25 காசு மிநிமம். உள்ளே போகமுடிந்தது . பயில்வான் மாதிரி ஒருவர் அமர்ந்திர்ந்தார் அதெல்லாம் பார்க்க முடியாது என்று கூறிவிட்டார்> நான் திரும்பினேன. அப்போது ஒரு ஸ்டான்ட நடிகர் என்னிடம் வந்தார் .
“தம்பி ! தலைவர் அப்படித்தான் சோல்வார் அதுக்காக எடுத்து கொடுப்பாங்களா? இதுக்கு போயி இம்பிட்டு துரம் வருவாங்காளா .பாத்து போழை ச்சிக்கிடுங்க தம்பி” என்றார்
நொந்து நூலாகி ஹைதிராபாத் வந்தேன். அலுவலகத்தில் எனக்கு மதுரை மாற்றல் உத்திரவு வந்திருப்பதாக சொன்னார்கள். முச்சு விடாமல் மதுரை கிளம்பிவிட்டேன்.
மற்றவர்கள் 300 ரூ கேட்டால்.?
அதன் பிறகு 28 வருடம் ஹதிராபாத் பக்கமே தலைவைத்து படுக்கவி ல்லை.
1962க்கு பிறகு எம்.ஜி.ஆர் படமே பார்த்ததும் இல்லை.
Syamalam Kashyapan https://www.facebook.com/syamalam.kashyapan?fref=nf