டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது தாயார் சோனியாகாந்திக்கு பரிசாக வழங்கிய நாய்க்குட்டிக்கு நூரி என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த பெயர் மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக ராகுலுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் தனது உலக விலங்குகள் தினத்தையொட்டி அக்டோபர் 4ந்தேதி அன்று தனது தாய் சோனியாவுக்கு நாய்க்குட்டியை பரிசாக வழங்கி உள்ளார். குடும்பத்தின் புதிய உறுப்பினரான நூரியை தனது தாய்க்கு ராகுல் வழங்கி உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் சமூகவலைதளத்தில் வீடியோ பகிரப்பட்டது. இது வைரலானது. தற்போது அந்த நாய்க்குட்டிக்கு நூரி என பெயரிடப்பட்டு உள்ளதாக ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமிய அமைப்பான அகில இந்திய மஜ்லிஸ் சார்பில், உ.பி.யைச் சேர்ந்த கட்சித் தலைவா் முகமது ஃபா்கான் நீதிமன்றத் தில் வழக்குத் தொடுத்துள்ளாா். அவரது மனுவில், ‘ . ‘நூரி’ என்ற வாா்த்தை இஸ்லாமிய புனித நூலான குரானுடன் தொடா்புடையது, குரானில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செய்தியாளர்களிடம் பேசிய முகமது ஃபா்கானின் வழக்கறிஞர் முகமது அலி, ‘ராகுல் காந்தி மீது இந்திய தண்டனைச் சட்டம் 295 ஏ (மத உணா்வுகளைப் புண்படுத்துதல்) பிரிவின்கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். ராகுல் காந்தி தனது முகநூல் பக்கம், யூ டியூப் பக்கத்தில் நாயின் பெயரைக் குறிப்பிட்டுள்ளாா். மேலும், செய்தித்தாள்களிலும் இது தொடா்பான செய்திகள் வந்துள்ளன. அவற்றை ஆதாரமாக காட்டியுள்ளோம்’ என்றாா்.