லூதியானா :
பஞ்சாப் மாநிலத்தில் செல்லப்பிராணிகள் மற்றும் வீட்டு விலங்குகள் ளர்ப்போருக்கு பதிதாக வரி விதித்திருப்பதாக வெளியான தகவலை பஞ்சாப் அரசு மறுத்திருக்கிறது.
வீட்டில் நாய், கிளி போன்று வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும், ஆடு, மாடு போன்று வளர்க்கும் வீட்டு விலங்குகளுக்கும் வரி விதித்திருப்பதாகவும், இதன்படி செல்லப்பிராணிகளாக ஆடு, நாய், பூனை ஆகியவற்றிற்கு வருடத்துக்கு 250 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்றும்
வீட்டு விலங்குகளான மாடு, குதிரை போன்றவற்றிற்கு வருடத்துக்கு 500 ரூபாய் வரி செலுத்த வேண்டும என்றும் தகவல் பரவியது. மேலும், ஒவ்வொரு விலங்குகளுக்கும் தனி அடையாள எண்ணும், முத்திரையும் வழங்கப்படும் என்றும் தகவல் பரவியது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில விவசாயிகள், ‘இந்த உத்தரவு மாநிலத்தின் பால் வளத்தை குறைக்கும். இந்த நடவடிக்கையினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்” என்று கவலை தெரிவித்தனர்.
ஆனால் இந்த செய்தியை பஞ்சாப் அரசு மறுத்திருக்கிறது.