சண்டிகர்: பஞ்சாபில் 2 பறவைகளின் மாதிரிகளை சோதனை செய்ததில் அவற்றுக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொகாலியில் பண்ணை ஒன்றில் இருந்த 2 கோழிகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந் நிலையில், அவற்றுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இது தொடர்பாக பஞ்சாப் தலைமைச் செயலாளர் வினி மஹாஜன் கூறியதாவது: பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விலங்குகள் நல வாரியம் மூலம் தொற்று பரவும் அபாயமுள்ள கோழிகளை பாதுகாப்பாக அழிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அனைத்து பண்ணைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று கூறினார்.