சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க ஆம்ஆத்மி கட்சி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என ஆத்ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.
பஞ்சாப். உத்தரப்பிரதேசம், கோவா, குஜராத், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு 2022ம் ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதங்களில் சட்டமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த மாநிலங்களில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. டெல்லியைத் தொடர்ந்து, பஞ்சாப், கோவாவிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆம்ஆத்மி கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, 117 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்து வரும் ஆம்ஆத்மி கட்சி, ஆளும் கட்சியாக மாற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. அப்போது, தேர்தலில் போட்டியிட்ட ஆம்ஆத்மி கட்சி 20 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. ஆம்ஆத்தி கட்சியின் வெற்றி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் உள்பட பஞ்சாப் மாநில பிரச்சினைகள் தீவிர கவனம் செலுத்தி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
2 நாள் சுற்றுப்பயணமாக பஞ்சாபில் முகாமிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், 2022 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
ஏற்கனவே, பஞ்சாபில் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், 24 மணி நேர மின்சார வசதி, அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை, மருந்துகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்jதுடன், சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தலுக்கான பத்து வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டது.
தற்போது, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்குகளிலும் மாதந்தோறும் ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
2022ம்ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோன்மணி அகாலிதள கூட்டணி, ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே பலமுனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
117 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோன்மணி அகாலிதள கூட்டணி, ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே பலமுனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 77 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அதற்கு முன்பாக மாநிலத்தில் சிரோன்மணி அகாலிதளம் – பாஜக கூட்டணி ஆட்சி 10 ஆண்டுகளாக நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.