லூதியானா

ஞ்சாப் முதல்வர் விவசாயிகளின் குறையை நீக்க பேராசிரியர் ஹக் தலைமையில் அமைத்த குழுவினரிடம் விவசாயிகள் பேராசிரியரிடம் கடன் தள்ளுபடியை விட தனியார் வங்கிகளின் வட்டிக்குறைப்பு அவசியம் என தெரிவித்தனர்.

பஞ்சாபில் அதிகரித்து வரும் கடன் தொல்லையால் விவசாயிகளின் தற்கொலை செய்துக் கொள்வதை தடுக்க பஞ்சாப் முதல்வர் விவசாயிகளின் குறையை நீக்க பேராசிரியர் ஹக் தலைமையில் அமைத்த குழு ஒன்றை அமைத்தார். இந்த குழுவினர் மாநிலம் எங்குமுள்ள விவசாயிகளை சந்தித்த பின் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில் காணப்படுவதாவது :

முக்கியமாக அனைத்து விவசாயிகளும் கடன் தள்ளுபடி என்பது இதற்கு சரியான முடிவாகாது.  அதை விட தனியார் வங்கிகள் வட்டியை குறைப்பதே அவசியமான ஒன்று.  தனியார் வங்கிகளின் அபரிமிதமான வட்டி விகிதத்தினால் தான் விவசாயிகள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்   தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகள் யாரும் கூட்டுறவு வங்கியில் இருந்து கடன் வாங்கவில்லை.  தனியார் வங்கிகளில் இருந்து தான் வாங்கி உள்ளனர்.  எனவே தனியார் வங்கிகள் வட்டி விகிதத்தை 4லிருந்து 5 சதவிகிதமாக அமைப்பது விவசாயிகளுக்கு நல்லது.

தற்போது ரூ 2 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்துள்ளது பயிர்க்கடன் மட்டுமே.  ஆனால் பால் உற்பத்தியாளர்கள், மீனவர்கள் ஆகியோருக்கு கூட்டுறவு வங்கிகள் கடன் கொடுப்பதில்லை.  தவிர நிறைய விவசாயிகள் தங்களின் நிலத்தையும், நகைகளையும் தனியார் வங்கியிடம் அடகு வைத்துத்தான் கடன் பெற்றுள்ளனர். எனவே அவர்கள் தங்களின் சொத்துக்களை இழக்கும் துயரம் தாளாமலும் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம்.

தற்போது விவசாயிகளின் தற்கொலை பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய முக்கிய தருணத்தில் உள்ளோம்.  விவசாயம் என்பது மிகவும் செலவை ஏற்படுத்தும் ஒரு தொழில் ஆகி விட்டது.  ஆனால் அதில் லாபமும் மிக மிக குறைவாகவே வருகிறது.  இதன் காரணமாகவே தற்கொலைகள் பெருகி வருகின்றன.  இது பற்றி முழுமையான ஒரு ஆய்வறிக்கை விரைவில் முதல்வருக்கு அளிக்க்கப்படும்

இவ்வாறு அந்த அறிக்கையில் காணப்படுகிறது.