சண்டிகா்: பஞ்சாபில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டிசம்பா் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் அமரீந்தா் சிங் அறிவித்துள்ளார்.

பஞ்சாபில் கொரோனா தொற்று, 2வது அலையாக பரவலாம் என்று அஞ்சப்படுகிறது. அதன் காரணமாக, கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன் காரணமாக, உணவகங்கள், திருமண மண்டபங்கள் இரவு 9.30 மணி வரை மட்டுமே இயங்கும் என்று உத்தரவிடப்பட்டது. முகக் கவசம் அணியாதவா்களுக்கும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்களுக்கும் தற்போது ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

டிசம்பா் 1ம் தேதியில் இருந்து இந்த தொகை ரூ.1,000ஆக உயா்த்தப்பட்டது. இந் நிலையில், பஞ்சாபில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டிசம்பா் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் அமரீந்தா் சிங் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்,  பஞ்சாபில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த டிசம்பர் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப் படுகிறது. வரும் 15ம் தேதி வரை போடப்பட்ட கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ம் தேதி வரைதொடரும் என்றும் அறிவித்துள்ளார்.