மிர்தசரஸ்

ஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாபில் அமிர்தசரஸில் சீக்கியர்களின் புகழ்பெற்ற பொற்கோயில் உள்ளது.  நேற்று மாலை இங்கு பிரார்த்தனை நடந்து கொண்டு இருந்தது.   அந்த நேரத்தில் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப் வைக்கப்பட்டிருந்த கருவறையின் பகுதியில் ஒருவர் குதித்துள்ளார்.  அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த வைரம் பதித்த வாளை எடுத்து அட்டூழியம் செய்துள்ளார்.

அங்கு இருந்த டிவியில் இது நேரடியாக ஒளிபரப்பானதால் அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.  அவரை பிடித்த பொற்கோவில் நிர்வாக்க்குழுவினர் அலுவலகத்து கூட்டிச் சென்றனர்.  அலுவலகத்தில் இருந்தவர்கள் தெய்வ நிந்தனை செய்த நபரை கடுமையாகத் தாக்கியதில் அந்த இளைஞர் மரணம் அடைந்துள்ளார்.

இந்த சம்பம் குறித்துக் காவல் ஆணையர், “தாக்குதலில் உயிரிழந்தவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 20-25 வயதான இளைஞர் ஆவார்.  இவர் பொற்கோயிலுக்கு எப்போது நுழைந்தார், அவருடன் எத்தனைப் பேர் இருந்தனர் என்பது குறித்த் ஆய்வு செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவித்த பஞ்சாப் முதல்வர் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.