சண்டிகர்:
பஞ்சாபில் நாடாளுமன்ற தேர்தல் கடைசி கட்டமான 7வது கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெறா விட்டால், அந்த தொகுதிகளுக்கு பொறுப்பாக உள்ள அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என்று முதல்மந்திரி அம்ரிந்தர் சிங் அமைச்சர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் 13 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு 7ஆம் கட்ட தேர்தலின் நாளான மே 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், மாநில அமைச்சர்களை தொகுதிகளுக்கு பொறுப்பாக நியமித்து, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் முதல்வர் அம்ரீந்தர் சிங். அவர்கள் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
சமீபத்தில், பஞ்சாப் மாநில அமைச்சரான முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜாத் சிங் சித்து, பீகாரில் நடைபெற்ற பிரசாரத்தின் போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், பஞ்சாப் முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவர் கேப்டன் அமீர்ந்தர் சிங், கட்சியின் உயர் கட்டளையின் முடிவைப் பொறுத்தவரையில், பஞ்சாபில் தற்போதுள்ள அமைச்சர்கள், காங்கிரசுக்கு வெற்றியை உறுதி செய்வதில் வெற்றிபெறவில்லை என்றால், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிகளிலிருந்தும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மிரட்டி உள்ளார்..
இதன் காரணமாக பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியினர் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.