அமிர்தசரஸ்:

ஞ்சாப் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற நடைபெற்ற 4  தொகுதிகளில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. அங்கு பாஜகவின் பாச்சா பலிக்கவில்லை.

பஞ்சாப் மாநிலத்தில் கேப்டன் அம்ரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு காலியாக இருந்த ஜலாலாபாத், பக்வாரா, முகேரியான் மற்றும் டாகா  ஆகிய 4 தொகுதிகளுக்கு கடந்த 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம், பாஜக நடுவே இங்கு கடும் போட்டி நிலவியது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஜலாலாபாத், பக்வாரா மற்றும் முகேரியன் ஆகிய மூன்று இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது,  டாகாவில் எஸ்ஏடி முன்னிலை வகிக்கிறது.   காங்கிரஸ் வேட்பாளர் பால்விந்தர் சிங் தலிவால் தனது அருகிலுள்ள போட்டியாளராகவும், பாஜக வேட்பாளர் ராஜேஷ் பாகாவை விடவும் 1,852 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

முகேரியான் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜங்கி லால் மகாஜன் காங்கிரஸ் வேட்பாளரான இந்து பாலாவுக்கு எதிராக 212 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

டாகா சட்டமன்றத் தொகுதியில், சிரோமணி அகாலிதள வேட்பாளர் மன்பிரீத் சிங் அயலி, காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் சந்துவை விட 759 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.