கேரள இடைத்தேர்தல்: எர்ணாகுளத்தில் 3,673 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி

Must read

கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், எர்ணாகுளம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

கேரள மாநிலத்தில் மஞ்சேஸ்வரம், எர்ணாகுளம், கோன்னி, வட்டியூர்காவு, அரூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 21ம் தேதி, கடும் மழைக்கு நடுவே திரளான அளவில் மக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து இடதுசாரிகள் முன்னணியும், காங்கிரஸ் கூட்டணியும் 5 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தன.

இந்நிலையில் தற்போது எர்ணாகுளம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடது முன்னணி வேட்பாளர் மனு ராயை விட 3673 வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் டி.ஜே வினோத் வெற்றி பெற்றுள்ளார்.

More articles

Latest article