துபாய்: பஞ்சாப் அணி நிர்ணயித்த 207 ரன்கள் இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, வெறும் 109 ரன்களுக்கே ஆட்டமிழந்து, 97 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது.

மொத்தம் 17 ஓவர்கள் வரையே தாக்குப்பிடித்த அந்த அணியில், வாஷிங்டன் சுந்தர் அடித்த 30 ரன்கள்தான் அதிகபட்ச ரன்களாகும்.

டி வில்லியர்ஸ் 28 ரன்களும், ஆரோன் பின்ச் 20 ரன்களும் அடித்தகர். கேப்டன் கோலி, 5 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்தார். மொத்தத்தில் இந்த நாள், பெங்களூரு அணிக்கு மோசமான நாளாக அமைந்தது.

பஞ்சாப் அணியில், ரவி பிஷ்னாய் மற்றும் முருகன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். காட்ரெல் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

டெல்லி அணியிடம் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியடைந்த பஞ்சாப் அணி, தற்போது மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளது. அந்த அணி கேப்டன் ராகுல், இந்த ஐபிஎல் தொடரின் முதல் சதத்தைப் பதிவுசெய்துள்ளார்.

 

[youtube-feed feed=1]