பஞ்சாப்,
பஞ்சாப் மாநில சட்டமன்றத்திற்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
117 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பஞ்சாப்பில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் அகாலித்தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க இந்த கூட்டணி கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
அதே போல கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த ஆட்சியை மீண்டும் பெற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தில் ஈடுபட்டது. டில்லியில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம்ஆத்மி, பஞ்சாபிலும் தனது முத்திரையை பதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பஞ்சாபில் இக் கட்சி பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மொத்த தொகுதிகள் 117
மொத்த வாக்குச்சாவடிகள் 22615
வாக்குப்பதிவு இயந்திரங்கள் 23056
மொத்த வாக்காளர்கள்
ஆண்கள் 10503108
பெண்கள் 9375546
மூன்றாம் பாலினம் 415
மொத்தம் 19879069
வேட்பாளர்கள்
ஆண்கள் 1063
பெண்கள் 81
மூன்றாம் பாலினம் 1
மொத்தம் 1145