சண்டிகர்:
பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதனால் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. ரெயில்கள், பேருந்துகளுக்க தீ வைத்து எரிககப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் கலவரத்தில் ஏற்பட்ட சேதத்திற்கு ஈடாக குர்மீத் ராம் ரஹீம் சிங் சொத்துக்களை முடக்க மாநில அரசுக்கு ஹரியானா, பஞ்சாப் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel