சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க 2 மணி நேரம் விலக்கு அளித்து முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாபில் பசுமைப் பட்டாசு வெடிக்க நேரம் அறிவித்து முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தீபாவளி மற்றும் குருநானக் ஜெயந்தி பண்டிகைக்கு பசுமைப் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் விலக்கு அளிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் பட்டாசு வெடிக்க விலக்கு தரப்படுகிறது.
.தீபாவளியன்று நவம்பர் 14ம் தேதி இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரையும், குருநானக் ஜெயந்தியான நவம்பர் 30ம் தேதி காலை 4 மணி முதல் காலை 5 மணி வரை பசுமை பட்டாசுகள் வெடிக்கலாம்.
அதே போன்று, நவம்பர் 30ம் தேதி இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரையும் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று, இரவு 11.55 மணி முதல் அதிகலை 12.30 மணி வரை வெடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.