சென்னை: பஞ்சாப் மாநிலத்தில், அரசு அதிகாரிகள் மக்கள் பணிக்கு லஞ்சம் வாங்குவதை தடுக்கும் வகையில், அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள பஞ்சாப் புதிய முதல்வர் பகவந்த் மான், அதற்கான பிரத்யேக போன் நம்பரை வெளியிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில்  ஆத்ஆத்மி கட்சிஆட்சியை கைப்பற்றியுள்ளது. அக்கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்று பல்வேறு அதிரடி  திட்டங்களை அறிவித்து வருகிறார். இன்று,  கட்கர் கலானில் பகத் சிங்கின் உருவ படத்திற்கு இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்சத்தை கட்டுப்படுத்த, லஞ்ச ஒழிப்பு உதவி எண்-ஐ அறிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  முதல்வர், பகவந்த் மான் பேசியதாவது, “லஞ்ச ஒழிப்பு எண்-ஐ இன்றுமுதல் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவுள்ளோம். அதன்படி 9501200200  எண்ணுக்கு பொதுமக்கள் அரசு அதிகாரிகள் மக்கள் பணி செய்ய லஞ்சம் கோரினால், புகார் அளிக்கலாம், வீடியோ எடுத்து அனுப்பலாம்.

நீங்கள் அளிக்கும் புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். இந்த பணியில் ஈடுபட்டுள்ள  எங்களின் பணியாளர்கள் நேர்மையாகவும், கடுமையான நடவடிக்கையும் எடுப்பார்கள் என்று உறுதி அளிப்பதாக கூறினார்.