நியூயார்க்
நியூயார்க் நகர மக்களில் மன எரிச்சல் அடைந்தோருக்காக குத்தும் பைகள் சாலையில் வைக்கபட்டுள்ளன.
உலகெங்கும் உள்ள பல நகரங்களில் மாசு, போக்குவரத்து நெரிசல், மக்கள் நெரிசல், பயண தாமதம் என பல வகை இடையூறுகள் ஏற்படுகின்றன. இதனால் பெரும்பாலான மக்கள் மிகவும் எரிச்சல் அடைகின்றனர். இந்த எரிச்சல் அடைந்த மக்களால் மீதமுள்ளோர் கடும் துயர் அடைகின்றனர்.
எனவே இந்த மன எரிச்சலுக்கு மக்களுக்கு ஒரு வடிகால் தேவை என அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் நினைத்தது. அதற்காக பல வழிமுறைகளை சிந்தித்த அந்நிறுவனம் இறுதியாக சாலைகளில் ஆங்காங்கே குத்தும் பைகள் பொருத்தி உள்ளது. மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பைகள் சதுர வடிவில் உள்ளன.
நியூயார்க் நகரின் பல பகுதிகளில் இந்த பைகள் சாலை ஓரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. எரிச்சலடையும் மக்கள் தங்கள் மன அழுத்தத்தை போக்கிக் கொள்ள இந்த குத்துப் பைகளில் ஓங்கி குத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஒரு மன நிம்மதி கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது.